கணினி பயனர்களுக்கு, மாறி மாறி வரும்
வெளிச்சத்தையும்,கம்ப்யூட்டர் மானிட்டரிலிருந்து வரும் அதிகளவு ஒளியையும் கண்கள் பார்த்துக்கொண்டே
இருப்பதால் விரைவிலே சோர்வடையும். சோர்வடைந்த கண்களுக்கு ஓய்வு அளிப்பது மிக முக்கியம்.
கணினி உலகில் கண்களுக்கு ஓய்வளிப்பதை 20-20 பார்முலா என்பார்கள். இதைப் பற்றி பெரும்பாலும் அறிந்திருப்பீர்கள்.
இது தவிர, கம்ப்யூட்டரின் Monitor ஒளியை மாற்றி அமைப்பதன் மூலம்
கண்களைப் பாதுகாத்திட முடியும். உதாரணமாக பகல் நேரத்தில் மானிட்டர் திரையின்
வெளிச்சம் குறைவாக இருக்கும். அதே இரவு நேரத்தில் மானிட்டர் வெளிச்சம் அதிகமாக
இருக்கும். இது கண்களை கண்டிப்பாக பாதிப்புக்கு உள்ளாக்கும். பெரும்பாலானவர்கள் மானிட்டர்
வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் ஒரே அளவிலேயே மாற்றமல்வைத்திருப்போம். அவ்வாறு
மாற்ற நினைத்தாலும் ஒவ்வொரு முறையும் பகலிலும், இரவிலும் மானிட்டர் திரை வெளிச்சத்தை
மாற்றி மாற்றி அமைத்துக்கொண்டிருக்க முடியாது. தானாகவே மானிட்டர் வெளிச்சம் பகலிலும்
இரவிலும் மாற்றிக்கொள்ளக்கூடிய வசதி இருந்தால் கண்களுக்கும் நல்லது. காட்சியும் சிறப்பாக
அமையும். இந்த வசதியை ஏற்படுத்திக்கொடுக்கிறது எப்லக்ஸ் என்ற மென்பொருள். இம்மென்பொருள்
நீங்கள் பகல் நேரத்தில் பணிபுரிந்தால், அதற்கேற்ற வெளிச்சத்தையும், இரவு நேரத்தில்
பணிபுரிந்தால் அதற்கேற்ற வெளிச்சத்தையும் தானாவே மாற்றிக் கொடுக்கும். வெளிச்சத்தின்
அளவினை நீங்களே தீர்மானிக்கலாம். அதற்கான வசதியும் இதில் உள்ளது.
மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: Download eye
protection from monitor software

No comments:
Post a Comment