Wednesday, 16 July 2014

கம்ப்யூட்டரில் பயன்படும் Plug-ins என்றால் என்ன ?


பொதுவாக Plug-ins என்பதன் அர்த்தம் ஒன்றுடன் தன்னை இணைத்துக்கொள்வது. தன்னிச்சையாக செயல்படும் திறம் அற்றது.  அதாவது இந்த Plug-in களை மட்டும் வைத்து நீங்கள் தனியாக பயன் அடைய முடியாது. நாம் பயன்படுத்தும் ஒரு பொருளுக்கு கூடுதலாக சக்தியை கொடுப்பதற்கு இதனை நாம் பயன்படுத்த முடியும். கம்ப்யூட்டரில் ஒரு மென்பொருள் ( Software ) இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த மென்பொருள் நம் கைக்கு கிடைந்த பிறகு அந்த மென்பொருள் தயாரித்த நிறுவனம் அதற்கு கூடுதலான ஒரு சக்தியை கொடுக்க நினைத்தால் அதை எப்படி கொடுப்பது.

Onlineல் பயோடேட்டாவை உருவாக்குவதற்கு!

 பலமணி நேரம் செலவு செய்தாலும் சரியாக பயோடேட்டா அமைய மாட்டேன் என்கிறதே என்று சொல்லும் நம்மவர்கள் கூட இனி தன் திறமையை எங்கு எந்த இடத்தில் காட்டினால் மேலதிகாரிகளை கவரலாம் என்று சொல்லி நமக்கு பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம். இத்தளத்திற்கு சென்று முகப்பில் இருக்கும் Get Started என்ற பொத்தானை சொடுக்கி நாம் பயோடேட்டா உருவாக்க ஆரம்பிக்கலாம். நம் பெயர், முகவரி, கல்வித்தகுதி, இதரதகுதிகள் என ஒவ்வொன்றாக கேட்டு வேலை செய்ய விரும்பும் துறைகள் வரை அனைத்தையும் கேட்ட பின் நம் பயோடேட்டாவை எப்படி கொடுத்தால் சிறப்பாக இருக்குமோ அப்படி கொடுக்கிற து.

ஆன்டி-வைரஸ் மென்பொருட்கள் இல்லாமல் வைரஸ்களை நீக்கும் எளிய வழி..!

USB DISK என்று சொல்லக்கூடிய பென்டிரைவ், நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை வைரஸ். இந்த கெடுதல் செய்யும் புரோக்ராம். இதனால் நமது தகவல்களை நாம் பார்க்க முடியாமல் போய்விடலாம்.  நம் வைத்திருக்கும் போல்டர்கள் காணாமல் போய்விடக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம்.இந்த வைரஸ்களை நீக்க கணினியில் ஆன்டி-வைரஸ் மென்பொருட்கள் இல்லாமல் போகும்.  எனவே இது போன்ற அவசர காலங்களில் எந்த வித மென்பொருட்களும் இல்லாமல் வைரஸ்களை நீக்க ஒரு எளிய வழி உள்ளது. பழுதான பென்ட்ரைவ்வை உங்கள் கணினியில் இணையுங்கள்.  பென்டிரைவ் எந்த டிரைவில் உள்ளது என்பதை நீங்கள் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

4GB ஜி.பி அளவுள்ள பையில்களை இமெயில் அனுப்ப

நாம் இமெயில் மூலம் பையில்களை அனுப்புவது வழக்கம் ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவு பையில்களை மட்டுமே அனுப்ப முடியும் . உதாரணமாக யாஹூ மூலம் நம்மால 25 எம்.பி அளவு கொண்ட பையில்களையே ஒரு நேரத்தில் அனுப்ப முடியும். இதனால் நாம்அதிக அளவுள்ள பையில்களை அனுப்ப வேண்டும் என்றால் அதை சிறிய அளவாக குறைத்து அதாவது 25 எம்.பி அளவுக்கொண்டதாக குறைத்து இரண்டு மூன்று தடவையாக தான் அனுப்ப முடியும். 

உங்கள் கணினியை வேகமாக Boot ஆக

உங்கள் COPMPUTER ஐ வேகமாக Boot ஆக சில வழிமுறைகள்

கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…

1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு c:\ – ல சேமிச்சு (Save)  வையுங்க.
2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.

“Cannot Delete File”களைஐ அழிக்க முடியவில்லையா

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும். சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். 

Administrator Password மறந்து போனால்



நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது? 

அனுப்பிய மெயில் ரத்து செய்வது!!!

 மெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவிகரமாக அமையும் . seng buttonஐ அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் அதற்கான அன்டூ (Undo) buttonஐ அழுத்த வேண்டும். ஏனென்றால் ஜிமெயில் 5 விநாடிகள் கழித்தே மெயிலை அனுப்பும் வேலையைத் செய்ய தொடங்குகிறது. ரத்து செய்யத் தரப்படும் இந்த நேரம் மிகவும் குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததனால், ஜிமெயில் இந்த கால அவகாசத்தினை அதிகமாக்கியுள்ளது. 30 விநாடிகள் வரை மெயில் அனுப்புவதை ரத்து செய்திடும் வசதியைத் தந்துள்ளது. 30 விநாடிகள் ஏன்? என்று நீங்கள் எண்ணினால், இதனைக் குறைத்துக் கொள்ளலாம். 5,10,20, 30 நொடிகள் என கால அவகாசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனை அமைத்திட Gmail > Settings > General > Undo Send என்று சென்று மாற்றவும்.

கணினியை தானாகவே shutdown செய்வது எப்படி?

கணினி பயன்பாட்டில் உள்ளபோது நீங்கள் வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அப்பொழுது நீங்கள் கணினியை நிறுத்த முடியாத வகையில் பயன்பாட்டில் இருக்கலாம் அல்லது பதிவிறக்கம் மற்றும் வைரஸ் ஸ்கேன் நிகழ்வு நடைப்பெற்று கொண்டிருக்கலாம். இப்பொழுது உங்கள் தேவையானது அந்த செயல்பாடு முடிந்தவுடன் கணினி தானாகவே நிறுத்தப்பட வேண்டும் என்பதுதானே..இது மாதிரியான் இக்கட்டான சூழ்நிலையில் இத்தகவல் உங்களுக்கு பயன்படும் என நம்புகிறேன்.

மானிட்டர் வெளிச்சத்தை மாற்ற மென்பொருள்

கணினி பயனர்களுக்கு, மாறி மாறி வரும் வெளிச்சத்தையும்,கம்ப்யூட்டர் மானிட்டரிலிருந்து வரும் அதிகளவு ஒளியையும் கண்கள் பார்த்துக்கொண்டே இருப்பதால் விரைவிலே சோர்வடையும். சோர்வடைந்த கண்களுக்கு ஓய்வு அளிப்பது மிக முக்கியம். கணினி உலகில் கண்களுக்கு ஓய்வளிப்பதை 20-20 பார்முலா என்பார்கள். இதைப் பற்றி பெரும்பாலும் அறிந்திருப்பீர்கள்.

Hidden Folder tricks ட்ரிக்ஸ்..


உங்கள் கணினியில் போல்டரை மறைக்கும் ட்ரிக்ஸ்.. (Hidden Folder tricks)
உங்கள் கணினியில் ஒரு கோப்புறையை மறைக்க இந்த ட்ரிக் எளிமையாக இருக்கும். பெரும்பாலானவர்களுக்குத் இது தெரியும்.  Folder Option சென்று Hidden கொடுத்தால் போதும். நீங்கள் மறைக்க நினைக்கும் போல்டர் மறைந்துவிடும். மீண்டும் மறைக்கப்பட்ட கோப்புறையைப் பெற அதேபோல Properties சென்று மீண்டும் Hidden என்பதில் டிக் அடையாளத்தை  எடுத்துவிட்டு ok கொடுத்தால் மீண்டும் மறைக்கப்பட்ட போல்டர் மீண்டும் தெரியும். போல்டரை மறைக்க மற்றுமொரு வழி: இது சற்று பாதுகாப்பாக இருக்கும். இந்த முறையில் நீங்கள் தேர்வு செய்யும் போல்டரானது முற்றிலும் மறைக்கப்பட்டுவிடும். இந்த முறையில் மறைக்கப்படும் Folder யாராலும் கண்டறிய முடியாது. போல்டர் இருக்கும் இடத்தை சரியாக நினைவு வைத்து அதை பயன்படுத்த வேண்டும். ஒரு வேளை நீங்களே மறந்துவிட்டால் கூட அந்த போல்டரை நீங்கள் மீண்டும் தேடிப்பெறுவது கடினம்.

தினசரி உணவு


Daily Burn- நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு எடுத்துக்கனும், நீங்க இப்ப சாப்பிடுற உணவுல, எந்த அளவுக்கு சத்துக்கள் இருக்கு, அதாவது கார்போஹைட்ரேட், புரதம்,
 கொழுப்பு, இன்னும், இந்த தளத்தில நுழைச்சி இலவசமா Account Open பண்னீங்கனா, அது உங்க உயரம், எடை எல்லா அளவையும் கேட்டுகிட்டு, இந்த அளவுக்கு நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு காலோரி எடுத்துக்கனும், அதுக்கு என்னென்ன சாப்பிடனும்னு, எல்லாம் சொல்லிடும். அதோட இல்லாம நீங்க என்னென்ன உடற்பயிற்சி செஞ்சா, Diet Control பண்ண முடியும், Weight increase எல்லாம் இருக்கு.. Read more:  http://dailyburn.com