USB DISK என்று சொல்லக்கூடிய பென்டிரைவ்,
நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை வைரஸ். இந்த கெடுதல் செய்யும் புரோக்ராம். இதனால்
நமது தகவல்களை நாம் பார்க்க முடியாமல் போய்விடலாம். நம் வைத்திருக்கும் போல்டர்கள்
காணாமல் போய்விடக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம்.இந்த வைரஸ்களை நீக்க கணினியில் ஆன்டி-வைரஸ்
மென்பொருட்கள் இல்லாமல் போகும். எனவே இது போன்ற அவசர
காலங்களில் எந்த வித மென்பொருட்களும் இல்லாமல் வைரஸ்களை நீக்க ஒரு எளிய வழி உள்ளது.
பழுதான பென்ட்ரைவ்வை உங்கள் கணினியில் இணையுங்கள். பென்டிரைவ் எந்த டிரைவில்
உள்ளது என்பதை நீங்கள் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
அதாவது, G: அல்லது வேறெந்த டிரைவில்
இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு,உங்கள் கணினியில் START+R அழுத்துங்கள்.
கீழே RUN சிறிய பாக்ஸ் ஓபன் ஆகும். அதில் CMD என டைப் செய்து
Enter தட்டுங்கள்.
இப்பொழுது
comment prompt என்ற விண்டோ தோன்றும், அதில் உங்கள் பென்டிரைவ் எந்த ட்ரைவ் லொக்கேசனில்
உள்ளதோ அந்த ட்ரைவின் லெட்டருடன் கோலன் சேர்க்கவேண்டும். உதாரணம் உங்கள் பென்ட்ரைவ்
G என்ற ட்ரைவில் இருந்தால் G:என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள்.
பிறகு attrib -r -a -s -h *.* இந்த வார்த்தையை
சரியான இடைவெளியில் (space) கொடுத்து என்டர் செய்யுங்கள். ஒரு சில வினாடிகளில் உங்கள்
பென்டிரைவில் அனைத்து கோப்புகளும் மீட்கப்பட்டிருக்கும். மீண்டும் உங்கள் பென்ட்ரைவ்யை
ஓபன் செய்து கோப்பைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment